மாணவ, மாணவிகளுக்கான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி
விழுப்புரம்: விழுப்புரத்தில் எய்ம்ஸ் முதலாவது ஓப்பன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உள்விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, பெங்களூரு, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம் மாநிலங்களில் இருந்து 700 பேர் பங்கேற்றனர். இதில், 6 வயது முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் வரை கட்டா, கும்தே பிரிவுகளில் நடந்தது.
போட்டியை விழுப்புரம் மேற்கு இன்ஸ்பெக்டர் நேவிஸ் அந்தோணி ரோஸி துவக்கி வைத்தார். இதில், சிறுவர், சிறுமியர் சீர்திருத்த மையம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், மாநில பேரிடர் மேலாண்மை கமிட்டி உறுப்பினர் பாபு செல்வதுரை உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அகில இந்திய கராத்தே பெடரேஷன் புதுச்சேரி மாநில தலைவர் சங்கர் நடுவராக செயல்பட்டார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு 10 ஆயிரம் ரூபாயும், 2வது பரிசு 7,000 ரூபாய், 3வது பரிசு 5,000 ரூபாய் மற்றும் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இறுதியாக, 40 வயதிற்கு மேற்பட்ட கராத்தே ஆசிரியர்களுக்கும் தனியாக போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
போட்டியை தமிழ்நாடு விளையாட்டு கராத்தே டூ அசோசியேஷன் விழுப்புரம் மாவட்ட தலைமை பயிற்சியாளர் ரகுராமன் ஒருங்கிணைத்தார்.