வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி திருவிழா ஆலோசனைக்கூட்டம்

வால்பாறை: வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவில் திருவிழா நடத்துவது குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலின், 67ம் ஆண்டு திருவிழா வரும், டிச., 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, 14ம் தேதி வரை நடக்கிறது. இதனையடுத்து திருவிழா சிறப்பாக நடத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம், கவுரவத்தலைவர் கிருஷ்ணாசுதீர் தலைமையில் நடந்தது.

விழா குழு தலைவர்களாக சேகர், துணைத்தலைவராக ரவி, செயலாளராக சுனில், பொருளாளராக சண்முகம் ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், இந்த ஆண்டு கோவில் திருவிழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படவுள்ளதால், கோவில் நிர்வாகிகள் விழா நிர்வாகிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவில் தலைவர் பிரசன்னாகுமாரன், செயலாளர் தவசிமுத்து, பொருளாளர் குட்டன்திருமேனி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement