வேளாண்மை இணை இயக்குனர் குமராட்சி வட்டாரத்தில் ஆய்வு

காட்டுமன்னார்கோவில்: குமராட்சி வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் செயல்படுத்தப்பட்ட வேளாண் திட்டங்கள் குறித்து மாவட்ட இணை இயக்குனர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கடலுார் மாவட்டம் குமராட்சி வட்டாரத்தில் வேளாண்மைத் துறை சார்பில் பல்வேறு வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதனை மாவட்ட இணை இயக்குனர் வசந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் அரசு திட்டங்கள் குறித்து கேட்டறிந்து செயல்படுத்துதல், விவசாயிகள் பயன்பாடு போன்றவைக் குறித்து கேட்டறிந்தார். பின்னர் சம்பா சாகுபடி குறித்து கள ஆய்வு செய்தார். அப்போது பூலாமேடு கிராமத்தில் விவசாயி அசோகன், நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கே என் எம் 1638 நெல் விதைப் பண்ணையை ஆய்வு செய்தார். தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்க திட்டத்தின் கீழ் நேரடி நெல் விதைப்பு தொகுப்பு பயன்பாடு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

விவசாயிகளுக்கு உர மேலாண்மை, பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பம் குறித்து விளக்கி கூறினார்.ஆய்வின் போது, வேளாண்மைத் துறை துணை இயக்குனர்கள் அமிர்தராஜ், கலெக்டர் நேர்முக உதவியாளர் கதிரேசன், தோட்டக்கலைத் துறை சிவக்குமார், குமராட்சி உதவி இயக்குனர் தமிழ்வேல் , வேளாண்மை அலுவலர் நடராஜன் மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement