'உலக' பரம்பரையில் ஒரு தமிழர்...
உலக கோப்பை போட்டியில் விளையாடிய முதல் தமிழ் வம்சாவளி வீரரானார் நிஷான் வேலுப்பிள்ளை, 25. இவரது தாய் கிலியன் ஒரு ஆங்கிலோ-இந்தியர். தந்தை சசிநாத், மலேசியாவில் குடியேறிய இலங்கை தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர். இவர்களது குடும்பம் ஆஸ்திரேலியாவில் 'செட்டில்' ஆனது. மெல்போர்னில் பிறந்த வேலுப்பிள்ளை, கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருந்தார். மெல்போர்ன் விக்டோரி கிளப் அணிக்காக விளையாடினார். பின் ஆஸ்திரேலிய அணியில் வாய்ப்பு பெற்றார். இம்முறை உலக கோப்பை அணியில் இடம் பிடித்த இவர், நேற்றைய துருக்கி அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்றார்.
ஆஸ்திரேலிய அணிக்காக முதல் கோல் அடித்த நெஸ்டோரி இரான்குண்டாவுக்கு பதிலாக 61வது நிமிடத்தில் களமிறக்கப்பட்டார். முன்கள வீரரான நிஷான், சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களை கவர்ந்தார். 20 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையில் விளையாடிய இந்திய வம்சாவளி வீரரானார். முன்னதாக 2006ல் பிரான்ஸ் அணிக்காக விகாஷ் தொராசூ (பூர்விகம் தெலுங்கு) விளையாடியிருந்தார்.
Great Achievements