எம்பாப்பே 2 கோல்; செனகலை 3-1 என வீழ்த்தி பிரான்ஸ் அபார வெற்றி
நியூ ஜெர்சி: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் 'ஐ' பிரிவு ஆட்டத்தில், பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில், பலம் வாய்ந்த செனகல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மைதானத்தில் நடந்த இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. செனகல் அணியின் தற்காப்பு ஆட்டம், பிரான்ஸ் அணிக்கு கடும் சவாலாக இருந்தது. இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
66-வது நிமிடத்தில், எம்பாப்பே ஆட்டத்தின் முதல் கோலை அடித்து, பிரான்சை முன்னிலைப்படுத்தினார். 82வது நிமிடத்தில், பிராட்லி பார்கோலா, தனது சார்பில் ஒரு கோல் அடித்து, பிரான்சின் முன்னிலையை 2-0 என உயர்த்தினார். ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+5), செனகல் அணியின் 18 வயது இளம் வீரர் இப்ராஹிம் எம்பாயே, மிரட்டலான கோல் அடித்து பிரான்சிற்கு அதிர்ச்சியளித்தார்.
செனகல் அணி அதனை கொண்டாடி முடிப்பதற்குள், அடுத்த நிமிடத்திலேயே (90+6-வது நிமிடம்) எம்பாப்பே இப்போட்டியில் தனது 2வது கோலை அடித்து, பிரான்சின் வெற்றியை (3-1) உறுதி செய்தார். இந்த கோல் மூலம், எம்பாப்பே தனது 58வது சர்வதேச கோலை பதிவு செய்து, பிரான்ஸ் கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். மேலும், உலகக்கோப்பை வரலாற்றில், எம்பாப்பேயின் மொத்த கோல்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
football feverமேலும் செய்திகள்
-
ஹேரி கேன் அசத்தல்; குரேஷியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
-
ஏமாற்றினார் ரொனால்டோ..! போர்ச்சுகல் - காங்கோ மோதிய போட்டி 'டிரா'
-
போர்ச்சுகல் அணிக்கு அதிர்ச்சி: காங்கோ அணியுடன் 'டிரா'
-
மீண்டும் வெல்லுமா மெக்சிகோ
-
மெஸ்ஸி ஹாட்ரிக்: அட்டகாசமான ஆட்டத்தால் அர்ஜென்டினா வெற்றி
-
ஹாலண்ட் அட்டகாசம்... ஈராக் அணியை துவம்சம் செய்தது நார்வே!