மெஸ்ஸி ஹாட்ரிக்: அட்டகாசமான ஆட்டத்தால் அர்ஜென்டினா வெற்றி
நமது நிருபர்
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை வீழ்த்தி அர்ஜென்டினா அணி அபார வெற்றி பெற்றது.
அல்ஜீரியா- அர்ஜென்டினா ஆகிய அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடந்தது. 38 வயதான லியோனல் மெஸ்ஸி உலகக் கோப்பையில் விளையாடுவது இது ஆறாவது முறையாகும். ஆட்டத்தை கண்டு மகிழ அவரது ரசிகர்கள் மைதானத்தில் ஆர்வத்துடன் திரண்டிருந்தனர்.
6வது நிமிடத்திலேயே மெஸ்ஸி கோல் அடித்தார். ஆனால் அது ஆப் சைட் காரணமாக செல்லாத கோலாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 9வது நிமிடத்தில் அல்ஜீரியா வீரர் அடித்த கோலும் ஆப் சைட் கோலாக மாறியது.
பிறகு பரபரப்பாக சென்று கொண்டிருந்த ஆட்டத்தில் 17வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார். இதனால் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. பிறகு அல்ஜீரியா கடுமையாக போராடியது.
ஆனால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் அர்ஜென்டினா முன்னிலையை தக்க வைத்து கொண்டது. இரண்டாம் பாதியில், 60வது நிமிடத்தில் மெஸ்ஸி தனது இரண்டாவது கோலை அடித்தார். இதனால் அர்ஜென்டினா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதைத்தொடர்ந்து மெஸ்ஸி, 76வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்ததுடன், அர்ஜென்டினாவின் வெற்றியையும் உறுதி செய்தார். பிறகு அல்ஜீரியா இறுதி நேரம் வரை கோல் அடிக்க பாடுபட்டது. ஆனால் எந்த பலனும் இல்லை.
இதனால், 3-0 என்ற கோல் கணக்கில் அல்ஜீரியாவை அர்ஜென்டினா அணி வீழ்த்தியது. உலகக் கோப்பை தொடரை வெற்றியுடன் துவங்கியது. மூன்று கோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்த மெஸ்ஸிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
மெஸ்ஸிக்கு வாழ்த்துக்கள்மேலும் செய்திகள்
-
ஹேரி கேன் அசத்தல்; குரேஷியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
-
ஏமாற்றினார் ரொனால்டோ..! போர்ச்சுகல் - காங்கோ மோதிய போட்டி 'டிரா'
-
போர்ச்சுகல் அணிக்கு அதிர்ச்சி: காங்கோ அணியுடன் 'டிரா'
-
மீண்டும் வெல்லுமா மெக்சிகோ
-
ஹாலண்ட் அட்டகாசம்... ஈராக் அணியை துவம்சம் செய்தது நார்வே!
-
எம்பாப்பே 2 கோல்; செனகலை 3-1 என வீழ்த்தி பிரான்ஸ் அபார வெற்றி