டேபிள் டென்னிஸ்: சீனா ஆதிக்கம்

பாரிஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் பெண்களுக்கான பைனலில் சீனா, ஜப்பான் அணிகள் மோதின. இதில் ஜப்பான் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இதன்மூலம் ஒலிம்பிக் அரங்கில் சீன பெண்கள் அணி தொடர்ச்சியாக 5வது தங்கம் (2008, 2012, 2016, 2020, 2024) வென்றது. தவிர இம்முறை, டேபிள் டென்னிசில் வழங்கப்பட்ட 5 தங்கத்தையும் தட்டிச் சென்றது சீனா.

* டேபிள் டென்னிஸ் போட்டி அறிமுகமான சியோல் ஒலிம்பிக்கில் (1988) இருந்து பாரிஸ் ஒலிம்பிக் வரை 42 தங்கம் வழங்கப்பட்டது. இதில் சீனா 37 தங்கம் வென்றது. தென் கொரியா 3, ஜப்பான், சுவீடன் தலா ஒரு தங்கம் வென்றன.

* ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் வரலாற்றில் 37 தங்கம், 21 வெள்ளி, 8 வெண்கலம் என 66 பதக்கம் வென்ற சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அடுத்த இடத்தில் தென் கொரியா (3 தங்கம், 3 வெள்ளி, 14 வெண்கலம்) உள்ளது.
* ஒலிம்பிக் வரலாற்றில் சீனா 300வது தங்கம் கைப்பற்றியது. பாரிசில் 40 தங்கம் வென்ற சீனா, இதுவரை 305 தங்கம், 246 வெள்ளி, 209 வெண்கலம் என 760 பதக்கம் வென்றுள்ளது.

Advertisement