கூடைப்பந்து: அமெரிக்கா அசத்தல்

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் கூடைப்பந்து போட்டியில் அமெரிக்காவுக்கு 2 தங்கம் கிடைத்தன.

பாரிஸ் ஒலிம்பிக் ஆண்களுக்கான கூடைப்பந்து பைனலில் அமெரிக்கா, பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் அசத்தலாக ஆடிய அமெரிக்கா 98-87 (20-15, 29-26, 23-25, 26-21) என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக 5வது தங்கம் (2008-2024) வென்றது. இது, ஒலிம்பிக் வரலாற்றில் அமெரிக்க ஆண்கள் அணி கைப்பற்றிய 17வது (1936, 48-68, 76, 84, 92-2000, 2008-24), தங்கம். ஒரு முறை (1972) வெள்ளி, 2 முறை (1988, 2004) வெண்கலம் வென்றது. வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் செர்பிய அணி 93-83 என ஜெர்மனியை வீழ்த்தியது.
* பெண்களுக்கான கூடைப்பந்து பைனலில் அமெரிக்கா, பிரான்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டியில் அமெரிக்க அணி 67-66 (15-9, 10-16, 20-18, 22-23) என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றது. இது, பாரிஸ் ஒலிம்பிக்கில் வழங்கப்பட்ட கடைசி தங்கம். தவிர இது, அமெரிக்கா பதக்கப்பட்டியலில் முதலிடம் பிடிக்க உதவியது.

Advertisement