கால்பந்து: பிரேசில் வீராங்கனை ஓய்வு

பாரிஸ்: பிரேசில் கால்பந்து வீராங்கனை மார்டா ஓய்வு பெற்றார்.

பிரேசில் ஒலிம்பிக் பெண்களுக்கான கால்பந்து பைனலில் பிரேசில், அமெரிக்கா அணிகள் மோதின. இதில் அமெரிக்க அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 5வது முறையாக (1996, 2004, 2008, 2012, 2024) தங்கம் வென்றது. பிரேசில் அணி 3வது முறையாக (2004, 2008, 2024) வெள்ளிப்பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தது.
மார்டா 'குட் பை': பிரேசில் வீராங்கனை மார்டா 38, இப்போட்டியுடன் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்றார். பிரேசில் அணிக்காக 6 உலக கோப்பை, 6 ஒலிம்பிக் என 185 போட்டிகளில் (119 கோல்) பங்கேற்றுள்ளார். இவர் இடம் பெற்றிருந்த பிரேசில் அணி உலக கோப்பையில் (2007) பைனல் வரை சென்றது. ஒலிம்பிக்கில் 3 முறை வெள்ளி வென்றது. இதன்மூலம் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் மார்டாவின் கனவு தகர்ந்தது.

Advertisement