தடகளம்: அமெரிக்கா ஒலிம்பிக் சாதனை

பாரிஸ் ஒலிம்பிக் ஆண்களுக்கான 4x400 மீ., தொடர் ஓட்டத்தின் பைனலில், பந்தய துாரத்தை 2 நிமிடம், 54.43 வினாடியில் கடந்த அமெரிக்க அணி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. அமெரிக்கா சார்பில் ராய் பெஞ்சமின், கிறிஸ்டோபர் பெய்லி, வெர்னன் நார்வுட், பிரேசி டெட்மான் பங்கேற்றனர்.
தவிர இலக்கை அதிவேகமாக கடந்த அமெரிக்க அணி புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தது. இதற்கு முன் பீஜிங் ஒலிம்பிக்கில் (2008) அமெரிக்க அணி பந்தய துாரத்தை 2 நிமிடம், 55.39 வினாடியில் அடைந்தது ஒலிம்பிக் சாதனையாக இருந்தது. இது, ஒலிம்பிக் அரங்கில் ஆண்களுக்கான 4x400 மீ., தொடர் ஓட்டத்தில் அமெரிக்காவுக்கு கிடைத்த 19வது தங்கப்பதக்கம்.

அடுத்த இரு இடங்களை போட்ஸ்வானா (2 நிமிடம், 54.53 வினாடி), பிரிட்டன் (2 நிமிடம், 55.83 வினாடி) அணிகள் கைப்பற்றின.
* பெண்களுக்கான 4x400 மீ., தொடர் ஓட்டத்தின் பைனலில் அமெரிக்க அணி (3 நிமிடம், 15.27 வினாடி) தங்கம் வென்றது. நெதர்லாந்து (3 நிமிடம், 19.50 வினாடி), பிரிட்டன் (3 நிமிடம், 19.72 வினாடி) அணிகள் முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றின.

Advertisement