மாரத்தான்: நெதர்லாந்து வீராங்கனை அபாரம்

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் மார்த்தான் ஓட்டத்தில் நெதர்லாந்தின் சிபான் ஹசன் தங்கம் வென்றார்.

பாரிஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான மாரத்தான் ஓட்டத்தில் பந்தய துாரத்தை 2 மணி நேரம், 22 நிமிடம், 55 வினாடியில் கடந்த நெதர்லாந்தின் சிபான் ஹசன், புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கம் வென்றார். இதற்கு முன் லண்டன் ஒலிம்பிக்கில் (2012) எத்தியோப்பியாவின் டிக்கி கெலானா (2 மணி நேரம், 23 நிமிடம், 07 வினாடி) ஒலிம்பிக் சாதனை படைத்திருந்தார். பாரிசில் 3வது பதக்கம் (5000, 10000 மீ., ஓட்டம், வெண்கலம்) வென்ற சிபான் ஹசன், 6வது ஒலிம்பிக் பதக்கம் கைப்பற்றினார். இதுவரை 3 தங்கம், 3 வெண்கலம் வென்றுள்ளார்.

வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே எத்தியோப்பியாவின் டிக்ஸ்ட் அசெபா (2 மணி நேரம், 22 நிமிடம், 58 வினாடி), கென்யாவின் ஹெலன் ஓபிரி (2 மணி நேரம், 23 நிமிடம், 10 வினாடி) கைப்பற்றினர்.




'பிரேக்டான்ஸ்': கனடா கலக்கல்


பாரிஸ் ஒலிம்பிக்கில் 'பிரேக்டான்ஸ்' போட்டி அறிமுகமானது. ஆண்களுக்கான பைனலில் கனடாவின் பில் விசார்டு, பிரான்சின் டான் டேனி மோதினர். இதில் கலக்கிய பிரேசில் பில் விசார்டு 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் ஆண்களுக்கான 'பிரேக்டான்ஸ்' போட்டியில் தங்கம் கைப்பற்றிய முதல் வீரர் ஆனாரர். டானி டேன் வெள்ளி வென்றார். வெண்கலப்பதக்கத்தை அமெரிக்காவின் விக்டர் கைப்பற்றினார்.

Advertisement