உலக சுற்றுலா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில், சுருளி அருவிப் பகுதியில் அரசு அலுவலர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் துாய்மையின் முக்கியத்துவம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.சுருளி அருவிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அப்பகுதியில் வாகன நிறுத்தம், உணவருந்தும் இடம் உட்பட பிற பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என நன்மை, பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முன்னதாக, நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.

இதில் கலெக்டர் ஷஜீவனா பங்கேற்று நடந்தார். மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் பாஸ்கரன், உத்தமபாளையம் தாசில்தார்சுந்தர்லால், வனத்துறை அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

Advertisement