இது, நீதி வழங்கும் நடவடிக்கை... இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்தார் ஜோ பைடன்

5

வாஷிங்டன்: ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் குண்டு வீசி கொன்றது, பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நடவடிக்கை என அமெரிக்க அதிபர் பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.


பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை, தங்களது விமானப்படை ஏவுகணையால் தாக்கி கொன்றது என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.

இது குறித்து அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கூறியதாவது: தன்னை தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை அமெரிக்கா ஆதரிக்கிறது.


ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டது, ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள், இஸ்ரேலியர்கள் மற்றும் லெபனான் குடிமக்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நடவடிக்கை.


ஹிஸ்புல்லா, ஹமாஸ் மற்றும் ஈரானிய ஆதரவு பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக இஸ்ரேலின் நடவடிக்கையை அமெரிக்கா ஆதரிக்கிறது. இவ்வாறு ஜோ பைடன் தெரிவித்தார். இதன் மூலம் இஸ்ரேலுக்கு தனது ஆதரவை ஜோ பைடன் வெளிப்படுத்தினார்.


ஐ.நா., கவலை




ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் பெய்ரூட்டில் நடந்த தாக்குதல்கள் மிகவும் கவலை அளிக்கிறது. இந்த வன்முறை தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். இதனால் லெபனான் மக்களும், இஸ்ரேலிய மக்களும் ஒரு முழுமையான போரைத் தாங்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement