கமலா ஹாரிஸ் பற்றி டிரம்ப் தாறுமாறான விமர்சனம்

1

வாஷிங்டன்: 'ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிசை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று என குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கடுமையாக சாடினார்.



அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 5ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து துணை அதிபர் கமலா ஹாரிஸ், 59, ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்குகிறார்.



மனநலம் குன்றியவர்




விஸ்கான்சினில் நடந்த பேரணியில் டொனால்டு டிரம்ப் பேசியதாவது: ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர். வன்முறை குற்றங்களை செய்யும் புலம்பெயர்ந்தோர்கள் அரக்கர்கள், மோசமான விலங்குகள். நாட்டிற்குள் அதிகமான சட்டவிரோத குடியேறிகளை அனுமதித்ததற்காக ஹாரிஸ் மற்றும் அதிபர் ஜோ பைடன் தான் காரணம். இவ்வாறு அவர் பேசினார்.


நவம்பர் 5ம் தேதி நடக்கும் அதிபர் தேர்தலில் ஓவராக பேசும் டிரம்பை இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் ஓட ஓட விரட்டுவாரா என்பது தெரிந்துவிடும்.

Advertisement