தரையிறங்காத ஹெலிகாப்டர் : பிரியங்கா பேரணி ரத்து; பா.ஜ., சதி வேலை என புகார்

11

ஜம்மு: மூன்றாம் கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக வந்த, பிரியங்காவின் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியவில்லை. இதற்கு பா.ஜ., கட்சியினரே காரணம் என்று ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள பிலாவரா மற்றும் பிஷ்னா தொகுதிகளில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும் மற்றும் வேட்பாளருமான மனோகர் லால்க்கு ஆதரவு திரட்ட கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா வர ஏற்பாடு செய்திருந்தனர். பிரியங்கா வந்த ஹெலிகாப்டர் தரையிறங்க இயலாததால் இந்நிகழ்ச்சிகள் தடைபட்டது.


இது குறித்து காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி குழு தலைமை செய்தி தொடர்பாளர் கூறுகையில், பா.ஜ.க.,வின் நாசவேலை காரணமாக, பிரியங்காவின் நிகழ்ச்சி நடைபெறாமல் போனது. இது குறித்து நாங்கள், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து, விசாரணை நடத்த வலியுறுத்துவோம் என்றார்.

Advertisement