கோல்கட்டா ‛‛டிராம்'' சேவைக்கு மூடுவிழா : மேற்குவங்க அரசு முடிவு

3


கோல்கட்டா: மேற்கவங்கம் கோல்கட்டாவில் 150 ஆண்டு டிராம் சேவையை நிறுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1800 களில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது அவர்களின் வசதிக்காக இந்தியாவில் கோல்கட்டா, சென்னை ஆகியபெருநகரங்களில் டிராம் போக்குவரத்து பழக்கத்தில் இருந்தது . இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. சென்னையில் நிறுத்தப்பட்டது.

மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் கடந்த 1873-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இன்று வரை டிராம் சேவை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்நிலையில் பெருகி வரும் வாகன போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் கோல்கட்டா நகரம் திணறுவதால் 150 ஆண்டுகள் கோல்கட்டாவை வலம் வந்த ‛‛டிராம்'' சேவைக்கு முடிவுரை எழுத மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் கோல்கட்டா மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
முன்னதாக மக்கள் கருத்தை கேட்டு முடிவு எடுக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement