அரசு கொறடாவாக ராமச்சந்திரன் நியமனம்

சென்னை : அரசு தலைமை கொறடாவாக, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் தலைமை கொறடாவாக இருந்த கோவி.செழியன், உயர் கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு, நேற்று பதவிஏற்றார்.

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட, குன்னுார் தொகுதி எம்.எல்.ஏ.,வான ராமச்சந்திரன், அரசு தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை, சட்டசபை செயலக செயலர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளார்.

Advertisement