மயான சாம்பலில் மாளாத சம்பாத்தியம்; ஜப்பானில் வேற லெவல் ஐடியா!

3

டோக்கியோ: ஜப்பானில் இறந்தவர்களின் சாம்பலில் உள்ள உலோகங்களை விற்பனை செய்து ரூ.377 கோடி வருவாய் ஈட்டியுள்ளனர்.


உலோகங்கள்




ஜப்பானில் வருடம் தோறும் சராசரியாக 15 லட்சம் பேரின் சடலங்கள் எரிக்கப்படுகிறது என தரவுகள் தெரிவிக்கிறது. அங்குள்ள மக்கள் தங்களின் பற்களை அடைக்க தங்கம், பலேடியம் உள்ளிட்ட உலோகங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் உயிரிழந்த பிறகு, எரிக்கப்படும் சாம்பல்களில் உலோகங்கள் அதிகம் இருக்கின்றன. எனவே அதனை விற்று பல்வேறு ஜப்பானிய நகரங்கள் பணம் சம்பாதிக்கின்றன.


ரூ.377 கோடி லாபம்




ஜப்பானில் 97% மயானங்கள் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன. இதன் மூலம் அரசு அதிக லாபம் சம்பாதிக்கின்றன. கடந்த 2023ம் ஆண்டு மட்டும், இறந்தவர்களின் சாம்பலில் உள்ள உலோகங்களை விற்பனை செய்து ரூ.377 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக கியோடா நகரம், யோகோஹாமா நகரம், நகோயா நகரம் அதிகம் லாபம் சம்பாதிப்பதாக, அரசு தெரிவித்த தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

Advertisement