மனைபட்டா கேட்டு குடியேறும் போராட்டம்


மனைபட்டா கேட்டு குடியேறும் போராட்டம்
பென்னாகரம், அக். 1-
பென்னாகரம் தாலுகா, மஞ்சநாயக்கனஅள்ளி பஞ்., கடமடை வருவாய் கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம், 9.88 ஏக்கர் நிலத்தில் மனை பட்டாவிற்காக, கடந்த, 2001 ல், நிலம் கையகப்படுத்தப்பட்டது.- மஞ்சநாயக்கனஅள்ளி மற்றும் கலப்பம்பாடி ஊராட்சிகளுக்கு, 11 கிராமங்களில் உள்ள, 651 ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததிய மக்கள், மனை பட்டா கேட்டு மனு கொடுத்து வருகின்றனர். உடனடியாக மனைபட்டா கேட்டு நேற்று
கடமடை, 5வது மைல்கல் கிராமத்தில் குடியேறும் போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில சிறப்பு தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜெயராமன், சேகர், வழக்கறிஞர் மாதையன், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் குமார் மாநிலக்குழு உறுப்பினர் சிசுபாலன், மூத்த தலைவர் இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாதன், மாவட்டக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் பேசினர்.
அங்கு வந்த, பென்னாகரம் தாசில்தார் ஆறுமுகம், ஆர்.ஐ., விஜயசாந்தி, வி.ஏ.ஓ., சக்திவேலக ரத்தினவேல் பென்னாகரம் டி.எஸ்.பி., ராஜசுந்தர் ஆகியோர் சங்க தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மஞ்சநாய்க்கன அள்ளி, கலப்பம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட, 11 கிராமத்திலுள்ள பட்டியலின மக்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட, 9.88 ஏக்கர் நிலத்தில் ஒரு மாதத்திற்குள் அளந்து மனைபட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர். இதையெடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

Advertisement