கம்பம் மெயின் ரோட்டில் திடீரென ஆக்கிரமிப்பு அகற்றம்

கம்பம்: கம்பம் மெயின்ரோட்டில் நெடுஞ்சாலைத் துறையினர் முன்னறிவிப்பின்றி திடீரென ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கம்பத்தில் அரசு போக்குவரத்துக்கழக பனிமனையில் ஆரம்பித்து அரசு மருத்துவமனை வரை இரண்டு பக்கமும் கடைக்காரர்கள் ரோட்டை ஆக்கிரமித்துள்ளதாக கூறி ஜூலை 2 ல் நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைத்தன.

இந்நிலையில் நேற்று காலை முன்னறிவிப்புமின்றி நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்பபுக்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். காலையில் கடைகளை திறந்த வர்த்தகர்களுக்கு அதிர்ச்சி. இப்போது தான் சில ஆயிரங்களை செலவழித்து மேற்கூரைகளை அமைத்தோம். தீபாவாளி சமயத்தில் மீண்டும் ஒரு நடவடிக்கையா என்று புலம்பி வர்த்தக சங்கம் சார்பில் கலெக்டருக்கு வேண்டுகோள் விடப்பட்டது.

தொடர்ந்து உத்தமபாளையம் ஆர்.டி.ஒ. தாட்சாயணி கம்பம் மெயின்ரோட்டை ஆய்வு செய்தார் பின்னர் வர்த்தக சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று, தீபாவளி முடிந்து நவ- 12 க்கு ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை வைத்துக் கொள்வது என்று அறிவித்து சென்றனர்.

Advertisement