ஏலத் தோட்டங்களில் ஆப்ரிக்கன் நத்தை நடமாட்டம் அதிகம் ஏலச் செடிகள் சேதம் என புலம்பல்

கம்பம்: ஏலத் தோட்டங்களில் ஆப்ரிக்கன் நத்தைகளால் ஏலச் செடிகள் சேதம் ஏற்படுவதாக ஏல விவசாயிகள் புலம்புகின்றனர்.

இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் ஏலக்காய் சாகுபடியில் 80 சதவீதம் இடுக்கி மாவட்டத்தில் சாகுபடியாகிறது. விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைக்காதது, சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காட்டு பன்றிகள் , கிளிகள் கூட்டத்தால் ஏலச் செடிகளுக்கு பாதிப்பு அதிகம்.

இந்நிலையில் ஆப்ரிக்கன் நத்தை கூட்டங்கள் நெடுங்கண்டம் பகுதியில் ஏலச் செடிகளை தாக்கி அழித்து வருகிறது. இவை பூக்களில் உள்ள தேனை உறிஞ்சுவதால், காய் பிடிப்பு உருவாகாமல் போய் விடுகிறது. இதனால் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது.

இது ஏலச் செடிகளை மட்டுமின்றி இஞ்சி, பப்பாளி உள்ளிட்ட பல்வேறு பயிர்களையும் தாக்குகிறது. இதன் ஆயுள் 5 முதல் 10 ஆண்டுகள் என்றும் , முழு வளர்ச்சி ஒராண்டில் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நத்தைகள்

மாலை 5 மணிக்கு மேல் தான் நடமாட்டம் இருக்கும் என்பதால் விவசாயிகள் இரவில் கண் விழித்து நத்தைகளை பிடித்து அழித்த வருகின்றனர்.

Advertisement