அரசாங்கம் எப்படி அமையணும்? ஜம்மு காஷ்மீர் வாக்காளர்களுக்கு அமித்ஷா முக்கிய மெசேஜ்

1

புதுடில்லி; பாதுகாப்பு, அமைதி ஆகியவற்றை முன்னிறுத்தும் ஒரு அரசாங்கம் ஜம்மு காஷ்மீருக்கு தேவை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி உள்ளார்.



ஜம்மு காஷ்மீரில் 3ம் கட்ட ஓட்டுப்பதிவு அறிவித்தபடி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந் நிலையில் ஜம்மு காஷ்மீர் வாக்காளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தி ஒன்றை சொல்லி இருக்கிறார். இது குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி உள்ளதாவது;

பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு, அமைதி என உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய தொலைநோக்கு பார்வை கொண்ட அரசாங்கம் ஜம்மு காஷ்மீருக்கு தேவை. இன்று ஓட்டு போடும் மக்கள், தங்கள் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்தி பயங்கரவாதம், பிரிவினைவாதம், ஊழல் ஆகியவற்றிலிருந்து ஜம்மு காஷ்மீரை விலக்கி வைக்கும் அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அமித் ஷா தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளார்.

Advertisement