பார்வதியிடமிருந்து 14 வீட்டு மனைகளை திரும்ப பெற்றுக்கொள்ள ‛முடா' சம்மதம்

18

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் சித்தராமையா மனைவிக்கு ஒதுக்கிய 14 வீட்டு மனைகளை திரும்ப பெற்று கொள்ள ‛முடா' சம்மதம் தெரிவித்துள்ளது.

முடா வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது.


இந்நிலையில் தனக்கு வழங்கிய 14 வீட்டு மனைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்' என, 'முடா'வுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி எழுதிய கடிதம் வெளியானது.முடாவுக்கு கடிதம் எழுதும்படி, மனைவி பார்வதிக்கு சித்தராமையா கூறி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இது குறித்து சித்தராமையா கூறியது, என மனைவி எடுத்த முடிவை நான் வரவேற்கிறேன். 14 வீட்டு மனைகளையும்‛முடா'விடம் திரும்ப ஒப்படைக்கிறோம் என்றார். இன்று 'முடா' வெளியிட்டுள்ள அறிவிப்பில், சித்தராமையா மனைவி பார்வதி தெரிவித்துள்ளபடி 14 வீட்டு மனைகளையும் திரும்ப பெற்றுக்கொள்ள முடா நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளது.

Advertisement