லெபனான் மீது தரைவழி தாக்குதலை துவக்கியது இஸ்ரேல் ராணுவம் :

10

பெய்ரூட், : இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்திய நிலையில், இன்று ( அக்.,1) லெபனானில் ஹிஸ்புல்லா மீதான தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் துவக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.


பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போர் ஒரு பக்கம் நடக்கும் நிலையில், அதற்கு ஆதரவான லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதலை, மேற்காசிய நாடான இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல்களில், 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட் உள்ளனர். பயங்கரவாதிகளின் இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இது, மேற்காசியாவில் முழு போர் சூழ்நிலையை உருவாக்கிவிடும் என, உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவிடம் தொலைபேசிய வாயிலாக பிரதமர் மோடி பேசினார். அமெரிக்க அதிபர் ஜோபைடன் , போரை நிறுத்துமாறு இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஹிஸ்புல்லா மீது தரைவழி தாக்குதல் நடத்துவதற்கு தயாராக இருக்கும்படி, தன் வீரர்களை இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்தது.

இதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன் லெபனான் தெற்கே டாங்கிகளை இஸ்ரேல் ராணுவம் குவித்தது. இதன் மூலம் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது. இன்று ( அக்.,1) ஹிஸ்புல்லாவின் ஏராளமான நிலைகள் மீது தரைவழி தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் துவக்கி அழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement