கதர்த் தொழிலுக்கு கை கொடுப்போம்; காந்தி ஜெயந்தி விழாவில் முதல்வர் வேண்டுகோள்

3

சென்னை: 'கதர் உற்பத்தியில் ஈடுபட்டோரின் வாழ்வில் உயர்வை ஏற்படுத்த கதர்த் தொழிலுக்கு கை கொடுப்போம்' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


காந்தி ஜெயந்தியை ஒட்டி, சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலை அருகே வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் மற்றும் மேயர் பிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.



பின்னர், அவர் கூறியதாவது:




தேச நலன் காக்கும் கதர், கிராமப்பொருட்களை அதிகளவில் வாங்கி நாட்டிற்கு வலிமை சேர்ப்போம். மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரும் கதர் ஆடைகளை வாங்க வேண்டும். கதர் ஆடைகளை அணிந்து மகிழ்வோம்; நெசவாளர்களை ஆதரித்து மகிழ்வோம்.

கதர் பருத்தி, கதர் பாலிஸ்டர், கதர் பட்டு ரகங்கள் மக்களுக்கு 30% தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. கதர் பொருட்கள் விற்பனைக்கு தமிழக அரசு துணை நின்று அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement