அமெரிக்க தேர்தலில் அடுத்த விவாதம்; துணை அதிபர் வேட்பாளர்கள் மோதலில் அனல்!

வாஷிங்டன்: அமெரிக்க துணை ஜனாதிபதி போட்டியாளர்களான ஜே.டி.வான்ஸ் மற்றும் டிம் வால்ஸ் பங்கேற்ற நேரடி விவாதத்தில் அனல் பறந்தது.


அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ.,5ம் தேதி நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, வேட்பாளராக போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரும், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், 59, போட்டியிடுகிறார். சமீபத்தில் அதிபர் வேட்பாளர் விவாதத்தில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்டு டிரம்ப் பங்கேற்றனர். இதில் கமலா ஹாரிசே வெற்றியாளராக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று (அக்.,02) அமெரிக்க துணை ஜனாதிபதி போட்டியாளர்களான ஜே.டி.வான்ஸ் மற்றும் டிம்.வால்ஸ், தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்னதாக, சி.பி.எஸ்., தொலைக்காட்சி நடத்திய நேரடி விவாதத்தில் பங்கேற்றனர். அமெரிக்க பொருளாதாரம், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் கருக்கலைப்பு உள்ளிட்ட பிரச்சனை குறித்து இருவரும் விவாதம் நடத்தினர்.

விவாதத்தில், சட்ட விரோத குடியேற்றம் ஒரு முக்கிய தலைப்பாக இருந்தது. வான்ஸ் பேசியதாவது: ​​இஸ்ரேலுக்கு இரும்புக் கவச ஆதரவை வழங்குவதாக கமலா ஹாரிஸின் வாக்குறுதியை திரும்ப பெற வேண்டும். முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியில் இருந்த காலத்தில் புதிய உலக மோதல்கள் எதுவும் வெடிக்கவில்லை.


கருக்கலைப்பு உரிமைகள், ஜனநாயகக் கட்சியினர் வாக்காளர்களை திருப்திபடுத்த பேசுவது ஆகும். கருக்கலைப்புக்கான கூட்டாட்சி உரிமையை மீட்டெடுக்க வேண்டும். டொனால்டு டிரம்ப் அதிபராக இருந்த போது, பணவீக்கம் குறைவாக இருந்தது. வீட்டிற்கு எடுத்துச் செல்லும் ஊதியம் அதிகமாக இருந்தது. நடுத்தர வர்க்க பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்பது குறித்து கமலா ஹாரிஸ் பெரிய திட்டங்களை வைத்திருந்தால், அவர் இப்போது அதை செய்ய வேண்டும்.


நாங்கள் கவனம் செலுத்தப் போவது என்னவென்றால், டொனால்டு டிரம்பின் வெற்றிகரமான கொள்கைகள் மற்றும் கமலா ஹாரிஸின் தோல்வியுற்ற கொள்கைகள் பற்றி அமெரிக்க மக்களுக்கு முடிந்தவரை சுருக்கமாகவும் நேரடியாகவும் விவரிப்பேன். நான் கடினமாக உழைக்கிறேன், அதைத்தான் செய்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


இஸ்ரேலுக்கு ஆதரவு




ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, துணை அதிபர் வேட்பாளர் டிம்.வால்ஸ் பேசியதாவது: துணை அதிபர் கமலா ஹாரிஸ் பொருளாதாரத் திட்டங்களைப் பாதுகாத்து வருகிறார். அவரை நடுத்தர வர்க்கத்தை நம்புகிறார்கள். மத்திய கிழக்கில் அமெரிக்கா முன்னிலையில் இருக்க வேண்டும். ஈரானின் ஆதரவுடைய பினாமிகளுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலை ஆதரிக்க வேண்டும். நிலையான தலைமைத்துவத்தை அமெரிக்கா கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement