'ஸ்கேட் கோ கோ'வில் மதுரை மாணவர்கள் சாதனை

மதுரை: மதுரை மாவட்டம்அவனியாபுரம் சங்கர நாராயணன் மெட்ரிக் பள்ளி, பாலமேடு அரசு மாதிரிப் பள்ளி, பத்திரகாளியம்மன் மெட்ரிக் பள்ளி, வேலம்மாள் பள்ளி, செயின்ட் மேரிஸ் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான ஸ்கேட் கோ கோ சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி சார்பில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

டில்லியில் 7 வது தேசிய ஸ்கேட் கோ கோ சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், 12, 14, 16, 19 வயதுக்குட்பட்ட பிரிவில் உ.பி., ம.பி., தமிழகம், குஜராத், இமாச்சல பிரதேசம், டில்லி, ஹரியானா உள்பட பல மாநிலங்களில் இருந்து 13 அணிகள் பங்கேற்றன.

12 வயதுக்குட்பட்டோர்பிரிவில் மதுரை மாணவர்கள் ஹரிகிரித்திஸ், தமிழரசன், அஸ்வின், மதிவதனன், ரகுநந்தன், தர்ஷன், முகமது இஷான், மிதுளன் ஆகியோர் 4க்கு 3 என்ற விகிதத்தில் இமாச்சல் அணியை வீழ்த்தி வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பிரஜித் குமார், கயிலைராஜன், தில்லேஷ் பிரபு, கிருஷாந்த், தியாஷ், அகிலேஷ், ஹரிஸ் ஆகியோர் 6 க்கு 1 என்ற விகிதத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அறிவரசு, மோகன்ரூபன், ஆனந்த பிரவீன், சரவணபாண்டி, அஜய்பாண்டியன், அரவிந்தன், நிர்மல், சேலத்தை சேர்ந்த வெற்றிசெல்வன் ஆகியோர் 16க்கு 10 என்ற விகிதத்தில் உ.பி., அணியை வீழ்த்தி தங்கம் வென்றனர்.

12 வயதுக்குட்பட்டோர் பெண்கள் பிரிவில் திருச்சி, சென்னை, காஞ்சிபுரம் மாணவிகள் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

பதக்கப் பட்டியலில் தமிழக அணி 2ம் இடம் பெற்று சாதனை படைத்தது.

மதுரை ஜே ராஜ் ஸ்பீட் ஸ்கேட்டிங் அகாடமி பயிற்சியாளர்கள் பிரபாகரன், நிகேஷ்குமார் மாணவர்களுக்கு பயிற்சியளித்தனர்.

Advertisement