புரட்டாசி பொங்கல் புரவி எடுப்பு விழா

திருநகர்: விளாச்சேரியில் புரட்டாசி பொங்கல் விழா நேற்று முன்தினம் துவங்கியது.

இவ்விழாவையொட்டி நேற்று முன்தினம் அழகு நாச்சியம்மன் கோயில் வீட்டில் இருந்து பெட்டி ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இரவு முதன்மைக்காரர்கள், ஊர் பொதுமக்கள் மாவிளக்கு வைத்தனர். பின்பு கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று அய்யனார் கோயிலுக்கு புரவி எடுக்கும் விழா நடந்தது. அய்யனார் சுவாமியுடன் ஒரு குதிரை கிராமத்தினர் சார்பிலும், மற்ற 10 குதிரைகள் மக்களின் நேர்த்திக்கடனாகவும் தயாரிக்கப்பட்டது. மாலையில் குதிரைகள் ஊர்வலமாக அக்ரஹாரம் கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அய்யனார் சுவாமி, குதிரைகளுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சியில் நடந்தது. பின்பு குதிரைகள் ஊர்வலமாக அய்யனார் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. இரவு கிடாய் வெட்டி பொங்கல் வைக்கப்பட்டது. விளாச்சேரி நான்கு தேவர் வகையறாக்கள், 5 தெரு பொதுமக்களும் விழா ஏற்பாடுகள் செய்தனர்.

Advertisement