வேலை பார்த்தது போதும்; உடனே புறப்பட்டு வாங்க; தூதர்கள் 5 பேருக்கு வங்கதேசம் உத்தரவு

6

டாக்கா: 'பிரஸ்செல்ஸ், கான்பெரா, லிஸ்பன், டில்லி மற்றும் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதர் என ஐந்து பேர் உடனடியாக டாக்கா திரும்புமாறு வங்கதேச வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது.


நம் அண்டை நாடான வங்கதேசத்தில், இட ஒதுக்கீடு தொடர்பாக, மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ், 84, தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது.


முந்தைய ஆட்சியில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், தூதர்களை மாற்றும் பணியில் இடைக்கால அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவுக்கான தூதர் உட்பட ஐந்து தூதர்களை திரும்ப அழைத்துள்ளது என்று வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


அதன்படி, பிரஸ்செல்ஸ், கான்பெரா, லிஸ்பன், டில்லி மற்றும் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர தூதர் என ஐந்து பேர் உடனடியாக தலைநகர் டாக்காவுக்குத் திரும்புமாறு வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது.


இந்தியாவில் யார்?





* இந்தியாவில் உள்ள வங்கதேச தூதர் முஸ்தாபிசுர் ரஹ்மான் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளார்.


* இந்தியாவில் பணியமர்த்தப்படுவதற்கு முன்பு, அவர் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபைக்கான வங்காளதேசத்தின் நிரந்தர பிரதிநிதியாகவும், சுவிட்சர்லாந்திற்கான தூதராகவும், சிங்கப்பூருக்கான உயர் அதிகாரியாகவும் பணியாற்றினார்.


* தற்போது, இவரை உடனடியாக தங்கள் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு திரும்பிச் செல்லுமாறு வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement