'போனது சிறுத்தை; வந்தது பூனைக்குட்டி': எச்.ராஜா கிண்டல்

8

மதுரை: 'முதல்வர் ஸ்டாலின் சந்திக்க திருமாவளவன் போகும் போது சிறுத்தையாக போனார். வெளியே பூனைக்குட்டியாக வந்தார்' என பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.


மதுரையில், நிருபர்கள் சந்திப்பில் எச்.ராஜா கூறியதாவது: மதுக்கடைகளை திறப்பது மாநில அரசு, மூடுவது மத்திய அரசு என மக்களை ஏமாற்றுகின்றனர். பீஹாரில் நிதீஷ்குமார் மதுவிலக்கு கொண்டு வந்துள்ளார். தமிழகத்திலும் மதுவிலக்கை கொண்டு வர வேண்டியது தான? மதுக்கடையை திறந்தவர்களிடம் தான் சாவி உள்ளது, அவர்கள் தான் மூட வேண்டும். மதுக்கடையை திறந்தவர்கள் முதலில் மூடுமாறு சீமான் நல்ல கேள்வி கேட்டுள்ளார்.


அறைகூவல்




மக்களை திசை திருப்ப, மத்திய அரசிற்கு எதிராக மடைமாற்றுவதற்காக இது ஒரு கூட்டு சதி. முதல்வர் ஸ்டாலின் சந்திக்க திருமாவளவன் போகும் போது சிறுத்தையாக போனார். வெளியே பூனைக்குட்டியாக வந்தார். உள்ளே பேரமா? மிரட்டலா? என்ன நடந்தது? மாநாட்டிற்கு அ.தி.மு.க., உள்ளிட்ட எல்லா எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுப்பதாக திருமாவளவன் கூறினார். இதன் பிறகு நாங்கள் அறைகூவல் விடுகிறோம் என்றார்.


தி.மு.க., ஓட்டுகள்




பட்டியல் சமூகத்திற்கு கூட திருமாவளவன் லீடர் இல்லை. மகாத்மா காந்தியின் பெயரை களங்கப்படுத்துவதற்கு நடந்த மாநாடு என்றால் இதுதான். விஜய் தி.மு.க.,வின் பி டீமா என்பது பற்றி பேசப் போவதில்லை. விஜய் வருகையால் தி.மு.க., ஓட்டுகள் தான் பிரிக்கப்படப் போகிறது. எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. பா.ஜ., கூட்டணியில் நேர்மை உள்ளது. தி.முக., கூட்டணியில் நேர்மை இல்லை. இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

Advertisement