அதிசயமா இருக்குப்பா ! புலிகளை கொல்லும் கோழிகள்


ஹனாய்: ஆடு, கோழிகளை புலி அடித்து கொன்றது என கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் தற்போது வியட்னாமில் பறவை காய்ச்சல் பாதிப்பால் 40க்கும் மேற்பட்ட புலிகள் இறந்து உள்ளதாக மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.


வியட்னாமில் சமீபத்தில் மழை வெள்ளம் புரட்டி போட்டது. இதில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்நேரத்தில் எச்5 என்1 என்ற பறவைக்காய்ச்சல் படுவேகமாக பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட கோழிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கும் பணியில் சுகாதார ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


இங்குள்ள டாங்க்னாய் என்ற பகுதியில் உள்ள மங்கோ கார்டனில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரை 20 புலிகள் பறவைக்காய்ச்சல் பாதிப்பில் இறந்துள்ளது. இறந்த புலிகளின் பாதுகாப்பாக அழிக்கப்பட்டது. இதுபோல் லாங்ஆன் என்ற பகுதியில் 27 புலிகள் இறந்துள்ளன. அங்கு செப்.6 முதல் 18 வரை 27 புலிகள், 3 சிங்கங்கள் இறந்துள்ளன.

பறவைக் காய்ச்சல் நோய்க்கிருமி , உலகளவில் கால்நடைகள், நாய்கள், பூனைகள் மற்றும் டால்பின்கள் உள்ளிட்ட பாலூட்டிகளுக்கு பரவுகிறது. மனிதனுக்கும் பரவக்கூடியதால் உலக அளவில் கவலை எழுந்துள்ளது. அரை வேக்காடு சிக்கன், முட்டை சாப்பிட வேண்டாம் என சுகாதார மையம் அறிவுறுத்தி உள்ளது.

Advertisement