இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: முதலீட்டாளர்களுக்கு ரூ.11 லட்சம் கோடி நஷ்டம்

5


மும்பை: இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தன. நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.11 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


உள்நாட்டுப் பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் இன்று (அக்.,3) கடும் வீழ்ச்சியை சந்தித்தன. நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பங்குச்சந்தைகள் செயல்படவில்லை. இன்று வர்த்தகம் துவங்கியதும் சென்செக்ஸ் 1,264.2 புள்ளிகள் சரிந்து 83,002.09 ஆகவும், அதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 345.3 புள்ளிகள் சரிந்து 25,451.60 ஆக இருந்தது.


மும்பை பங்குச்சந்தையில், ஹெவிவெயிட் பங்குகளாக கருதப்படும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், லார்சன் அண்ட் டார்போ, ஆக்ஸிஸ் வங்கி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், மாருதி, கோடாக் மகேந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்.டி.எப்.சி பங்குகள் சரிவில் இருந்தன. இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் காரணமாக பங்குச்சந்தை வீழ்ச்சியை சந்தித்ததாக கூறப்படுகிறது.


வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1,769 புள்ளிகள் சரிந்து, 82,497 புள்ளிகளாகவும், நிப்டி 529 புள்ளிகள் சரிந்து 25,266 புள்ளிகளாகவும் நிறைவுப்பெற்றன. நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்ததால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.11 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement