நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 60 பேர் பலி: திருவிழாவுக்கு சென்று திரும்பும்போது சோகம்!

1

மைடுகுரி: நைஜீரியாவில், திருவிழாவிற்கு சென்று திரும்பும்போது, 300 பேருடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து 60 பேர் பலியாகினர்.


ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது நைஜர் மாகாணம். இங்கு ஆண்டு தோறும் மவுலுத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வாறு கொண்டாடிவிட்டு,முண்டியிலிருந்து கபாஜிபோவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த மரப்படகு, நேற்று இரவு திடீரென கவிழ்ந்தது.


இது குறித்து அந்நாட்டு தலைவர் ஜிப்ரில் அப்துல்லாஹி முரேகி கூறியதாவது:


நைஜர் மாகாணத்தில் நடந்த திருவிழாவில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 300 பயணிகளை ஏற்றிச்சென்ற மரப்படகு, நேற்று இரவு கவிழ்ந்து ஆற்றில் மூழ்கியதில் 60 பேர் பலியாகினர். 160 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement