பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை ஆய்வுக்கூட்டம்

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தின் ஆய்வுக்கூட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடந்தது.

மாவட்டத் தலைவர் கனகராஜ் தலைமை வகித்தார். தேசிய பொதுச்செயலாளர் உறுப்பினர் சேர்க்கை மாநில பொறுப்பாளர் எச்.ராஜா, விளையாட்டு மேம்பாட்டுத்திறன் பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் பேசினர். தேசிய பொதுக்குழு உறுப்பினர் திருமலைசாமி, முன்னாள் எம்.பி., கார்வேந்தன், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் செந்தில்குமார், ஜெயராமன், மாவட்ட பொருளாளர் ஆனந்த் கலந்து கொண்டனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில் அண்ணாமலை நன்றி கூறினார்.

Advertisement