சர்வதேச எரிசக்தி மையத்தில் இணைகிறது இந்தியா!

புதுடில்லி; 16 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட சர்வதேச எரிசக்தி மையத்தில் இந்தியா இணைவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில், பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில், சர்வதேச எரிசக்தி மையத்தில் இந்தியாவும் பங்கெடுப்பதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், 16 நாடுகளுடன் இணைந்து புதிய கண்டுபிடிப்புகள், பயிற்சிகளை மேற்கொள்ள முடியும் என்று மத்திய எரிசக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆற்றல் திறன் கொண்ட தொழில்நுட்பங்களின் மூலம் பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்காக உலக நாடுகள் எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளுக்கு ஏற்கனவே இந்தியா ஆதரவு கொடுத்து வரும் நிலையில், தற்போது அடுத்த முயற்சியாக, சர்வதேச எரிசக்தி மையத்தில் இடம்பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, இந்தியா சார்பில் எரிசக்தி திறன் பணியகம் (BEE) அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement