'கொடை' யில் போக்குவரத்து மாற்றம்; இரு தரப்பினர் மாறுபட்ட கருத்து

கொடைக்கானல் : கொடைக்கானலில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது.



கொடைக்கானலில் வழக்கமாக வானியியற்பியல் மையம் வழியாக வனச்சுற்றுலா தலங்களை பார்வையிட்டு பாம்பார்புரம் வழியாக நகரை வந்தடையும் நடைமுறை இருந்தது. இதை தொடர்ந்து கொடைக்கானலில் தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் போலீசார் செப்.28 முதல் பாம்பார் புரம், பசுமை பள்ளதாக்கு வழியாக வனச்சுற்றுலா தலங்கை பார்வையிட்டு வானியியற்பியல் மையம் வழியாக நகரை வந்தடையும் சோதனை அடிப்படையிலான போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர்.


இதை தொடர்ந்து பாம்பார்புரம் பகுதியினர் வியாபாரம் பாதிக்கப்படுவதாக ஆர்.டி.ஒ., டி.எஸ்.பி.,யிடம் மனுயளித்து போக்குவரத்தை பழைய முறையில் செயல்படுத்த கோரினர். அதே நேரத்தில் தற்போதைய போக்குவரத்து மாற்றத்தால் போக்குவரத்து நெரிசலின்றி சுமுகமாக உள்ளதாக பொதுமக்கள், வணிகர்கள் கோரிக்கை விடுத்து இதே நடைமுறை தொடர வலியுறுத்தி ஆர்.டி.ஒ., அலுவலகத்தில் குவிந்தனர். இவர்களது கோரிக்கையை மனுவை பெற்ற ஆர்.டி.ஒ. சிவராம் தற்போதைய போக்குவரத்து மாற்றம் தொடரும் என உறுதியளித்தன் பேரில் கலைந்து சென்றனர்.

Advertisement