பெரியநாயகி அம்மன் கோயிலில் துவங்கியது நவராத்திரி விழா

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட பெரியநாயகி அம்மன் கோயிலில் காப்பு கட்டுதலுடன் நவராத்திரி விழா துவங்கியது.

இக்கோயிலில் நேற்று காலை காப்பு கட்டுதலுடன் விழா துவங்க கோயில் யானை கஸ்துாரிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

உச்சிக்கால பூஜைக்கு பின் விநாயகர், மூலவர், துவாரபாலகர்கள், மயில் வாகனம், நவவீரர்கள் ஆகியோருக்கு காப்பு கட்டப்பட்டது.

போகர் சன்னதியில் இருந்து புவனேஸ்வரி அம்மன் புலிப்பாணி ஆசிரமத்திற்கு பல்லாக்கு மூலம் எழுந்தருளினார். இவ்விழா அக்., 12 வரை நடக்கவுள்ளது.

விழாவின் ஒன்பதாம் நாளான அக்., 12 மதியம் 1:30 மணிக்கு முருகன் கோயிலில் சாயரட்சை பூஜை நடக்கிறது.

பின் அங்கிருந்து பராசத்தி வேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு வந்தடைகிறது.

தொடர்ந்து தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி புறப்பட்டு கோதை மங்கலத்தில் புலிப்பாணி பாத்திர சுவாமிகள் மூலம் அம்பு போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின் சுவாமி பெரியநாயகியம்மன் கோயிலை வந்தடைய வேல் முருகன் கோயில் வந்தடைந்ததும் அங்கு அர்த்த சாம பூஜை நடக்கவுள்ளது.

Advertisement