நல்ல மனம் வாழ்க; சர்ப்ரைஸ் தந்த தூய்மைப் பணியாளர்களை கமென்ட் செய்து வாழ்த்துங்க வாசகர்களே!

36

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி கோவில் விழாவின்போது பூக்கடை உரிமையாளரான அஸ்வினி ரூ.25,000 பணத்தை தொலைத்து விட்டார். அதை தூய்மை பணியாளர்களான நீலாவதி, தேவி ஆகியோர் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். நல்ல மனசு உடைய தூய்மை பணியாளர்கள் குறித்து நீங்கள் என் நினைக்கிறீர்கள்' என்பது குறித்து கமென்ட் செய்யுங்கள் தினமலர் வாசகர்களே!




சென்னை திருவல்லிக்கேணியில் கோவில் விழாவில் கூட்டம் நெரிசல் அலைமோதியது. அங்கு, பூக்கடை நடத்தி வந்த அஸ்வனி என்பவர் ரூ.25 ஆயிரத்தை தொலைத்து விட்டார். இதையடுத்து, பணம் தொலைந்து போனதை, அறிந்து அஸ்வினி பதற்றத்துடன் தேடி அலைந்தார். உழைத்த பணம் எங்கும் போகாது என்று சொல்வார்கள். தூய்மை பணி மேற்கொண்ட நீலாவதி, தேவி ஆகியோர் பணத்தை பார்த்ததும் எடுத்தனர். அவர்கள் பணத்தை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


பணத்தை, தேடி கண்டெடுத்து கொடுத்த தூய்மை பணியாளர்களுக்கு, அஸ்வினி நன்றி தெரிவித்தார். இந்த புகைப்படத்தை சென்னை மாநகராட்சி சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளது. 'வணக்கம் சென்னைமக்களே, திருவல்லிக்கேணியில் கோவில் விழாவின்போது பூக்கடை உரிமையாளரான அஸ்வினி தொலைத்த ரூ.25 ஆயிரம் பணத்தை மீட்டு தூய்மை பணியாளர்கள் கொடுத்துள்ளனர்' என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


தூய்மை பணியாளர்களை சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். 'அடுத்தவர்கள் பணம் நமக்கு தேவையில்லை. உழைத்த பணம் மட்டும் போதும் என்ற மனசு உடைய தூய்மை பணியாளர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்' என்பது குறித்து, செய்தியை படித்து முடித்துவிட்டு கமென்ட் செய்யுங்கள் தினமலர் வாசகர்களே!

Advertisement