3வது மாடியில் இருந்து குதித்த மஹா., துணை சபாநாயகர்; காரணம் தெரிஞ்சா 'ஷாக்' ஆகிடுவீங்க!

14

மும்பை: பழங்குடியினர் பட்டியல் பிரிவில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் சேர்க்கப்பட்டதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, மஹாராஷ்டிரா மாநிலத்தின் துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் , மற்றும் 3 எம்.எல்.ஏ.,க்கள் 3 மாடியில் இருந்து குதித்தனர்.


இது குறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது:பழங்குடியினர் பட்டியல் பிரிவில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் சேர்க்கப்பட்டதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, மஹாராஷ்டிராவில் மந்தராலயா என அழைக்கப்படும் தலைமைச்செயலகத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதிக்க முடிவு செய்து. துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் மற்றும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மந்த்ராலயாவின் மூன்றாவது மாடியில் இருந்து குதிக்க முடிவு செய்தனர்.

முன்னெச்சரிக்கையாக, விரைந்து வந்த போலீஸ் நடவடிக்கையால், மாடிகளுக்கு இடையே வலை விரிக்கப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் எவ்வித காயங்கள் இல்லாமல் காப்பாற்றப்பட்டனர்.

நர்ஹரி ஜிர்வால், தேசிய வாத காங்கிஸ் கட்சி(அஜித் பவார் அணி)யை சேர்ந்தவர். அவருடன் இருந்த 3 எம்.எல்.ஏ.,க்களும் அதே கட்சியை சேர்ந்தவர்கள்.

முன்னதாக, காலையில் பழங்குடியினர் எம்.எல்.ஏ.,க்கள் சிலர் தலைமைச்செயலகம் முன் போராட்டம் நடத்தினர். அப்போது மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அமைச்சரவை கூட்டத்தில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர்கள் அஜித் பவார் மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டிருந்தனர். அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisement