நாமக்கல்லில் சிக்கிய மேவாட் கொள்ளையர்களின் பின்னணி! பகீர் கிளப்பிய தகவல்கள்

2

நாமக்கல்; நாமக்கல்லில் சிக்கிய மேவாட் கொள்ளையர்கள் ஆந்திராவில் ரூ. 1.6 கோடியை வங்கி ஏடிஎம்களில் கொள்ளை அடித்த விவரம் வெளியாகி இருக்கிறது.



கொள்ளை அடிப்பதையே தங்களின் பாரம்பரியமாக கொண்ட மேவாட் கொள்ளை கும்பல் கேரளாவில் 3 ஏ.டி.எம்.,களை உடைத்து ரூ.67 லட்சத்துடன் தமிழகம் தப்பியது. தமிழகத்தில் நுழைந்த அவர்களை நாமக்கல் மாவட்ட போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் ஒரு கொள்ளையன் சுட்டுக் கொல்லப்பட மற்றொருவன் படுகாயம் அடைந்தான். எஞ்சிய 5 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந் நிலையில் சிக்கிய கொள்ளையர்கள் பற்றி வெளியாகும் அடுத்தடுத்த தகவல்கள் தலை சுற்ற வைப்பதாக உள்ளன. விசாகப்பட்டினத்தில் 6 ஏ.டி.எம்.,களில் மகேந்திரா காரை பயன்படுத்தி கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். நாமக்கல்லில் சிக்கிய அதே கண்டெய்னர் லாரியை தான் விசாகப்பட்டினம் கொள்ளையிலும் பயன்படுத்தி உள்ளனர். அங்கு மட்டும் அவர்கள் கொள்ளையடித்த பணம் ரூ.1.6 கோடியாகும்.

கொள்ளை சம்பவங்கள் குறித்து சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.கேரள போலீசாரை தொடர்ந்து, கொள்ளையர்களிடம் விசாகப்பட்டினம் போலீசாரும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

திரிச்சூர் நீதிமன்றத்தில் ஆஜர்



கொள்ளையர்கள் 5 பேரை கேரள போலீசார் திரிச்சூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, அவர்களை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement