இலங்கைக்கு இந்தியா ஆதரவு: உறுதிப்படுத்தினார் ஜெய்சங்கர்!

7

கொழும்பு: 'இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும்' என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி தெரிவித்துள்ளார்.

இலங்கையில், சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே ஆட்சியைப் பிடித்தார். அவரை இன்று காலை, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கொழும்புவில் சந்தித்து பேசினார்.


இது குறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:
அதிபர் அனுரா குமார திசநாயகேவை சந்தித்தேன். இந்தியா-இலங்கை உறவுகளை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்தும் ஆலோனை நடத்தினோம். இலங்கையின் பொருளாதார மறுகட்டமைப்பிற்கு இந்தியா தொடர்ச்சியான ஆதரவை அளிக்கும் என்பதை உறுதிப்படுத்தினேன்.
இவ்வாறு ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் ஹரிணி அமரசூர்யா, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, அந்நாட்டு அமைச்சர்கள், துாதர்கள், அதிகாரிகளையும் ஜெய்சங்கர் சந்தித்தார்.

Advertisement