சீன எல்லையில் உள்கட்டமைப்பு அதிகரிப்பு: விமானப்படை தளபதி

புதுடில்லி: ''எல்லையில் உள்கட்டமைப்புகளை சீனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவும் அதிகரித்து வருகிறது,'' என இந்திய விமானப்படை தளபதி ஏபி சிங் கூறியுள்ளார்.

விமானப்படை தினத்தை முன்னிட்டு நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் சீனா தொடர்ந்து உள்கட்டமைப்பை அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியாவும் தனது பகுதியில் உள்கட்டமைப்பை அதிகரித்து வருகிறது.
இனி வரும் நாட்களில் உருவாகும் பாதுகாப்பு சவால்களை சந்திக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கியமாக இருக்கும். 2047 ம் ஆண்டுக்குள் இந்திய விமானப்படையில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.


எஸ்400 ஏவுகணை அமைப்பை, நமக்கு ரஷ்யா வழங்குகிறது. இதுவரை 3 அமைப்புகளை வழங்கி உள்ளது. அடுத்த ஆண்டிற்குள் இன்னும் இரண்டு அமைப்புகளை வழங்குவதாக ரஷ்யா உறுதி அளித்துஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement