தேவைப்பட்டால் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை

டெஹ்ரான்: '' இஸ்ரேல் மீதான தாக்குதல் நியாயமானது எனவும், தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம், '' என ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ருல்லா, இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாடு மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு பின் பொது இடத்தில் நடந்த கூட்டத்தில் ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி பேசியதாவது: ஈரானின் எதிரி தான் ஈராக், லெபனான், எகிப்துக்கும் எதிரியாக உள்ளது. அனைவருக்கும் ஒரே பொது எதிரி. காசா மக்களுக்கு ஆதரவாக பெலனான் நடத்தும் தாக்குதல் சரியானதே. இது சிறிய தண்டனைதான்.


ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக இஸ்ரேல் வெற்றி பெற முடியாது. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உண்டு. இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் நியாயமானது. தேவைப்பட்டால் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம். இஸ்லாமிய நாடுகளை பிரித்தாள இஸ்ரேல் முயற்சி செய்கிறது. இதனால் அனைவரும் ஒருங்கிணைந்து எதிரிகளை கையாள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement