கொள்ளையடிக்கும் திட்டமா 100 நாள் வேலை திட்டம்:ஐகோர்ட் கிளை வேதனை

1

மதுரை: '' 100 நாள் வேலை திட்டத்தை பெரும்பாலான ஊராட்சி தலைவர்கள் கொள்ளையடிக்கும் திட்டமாக பயன்படுத்தி வருகின்றனர்,''என ஐகோர்ட் மதுரை கிளை வேதனை தெரிவித்து உள்ளது.


கரூர் அரவக்குறிச்சி கிராம பஞ்சாயத்தில் நடந்த முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் கிளை கூறியதாவது: மஹாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை பெரும்பாலான ஊராட்சி தலைவர்கள் கொள்ளையடிக்கும் திட்டமாக பயன்படுத்தி வருகின்றனர். மஹாத்மா பெயரை வைத்து கொண்டு முறைகேடு செய்வது வியப்பாக உள்ளது.

இத்திட்டம் அமல்படுத்தப்படுவதை அதிகாரிகள் முதல் அலுவலர்கள் வரை முறையாக கண்காணிப்பது இல்லை. அதிகாரிகள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படுவதும் இல்லை. கண்காணிப்பதும் இல்லை எனக்கூறியதுடன், மத்திய ஊழல் தடுப்பு பிரிவு இயக்குநரகம், தமிழக ஊரக வளர்ச்சி துறை செயலர், கரூர் கலெக்டர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டது.

Advertisement