அரசாணிமங்கலம் பால பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஏரிக்கரையொட்டி வேடபாளையம் வழியாக அரசாணிமங்கலம் செல்லும் சாலை உள்ளது. குறுகியதான இந்த சாலையை விரிவாக்கம் செய்ய அப்பகுதியினர் வலியுறுத்தி வந்தனர்.

அதன்படி, இச்சாலையை சீரமைக்க ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ், 6.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன் இதற்கான பணி துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. இப்பணியின் ஒரு பகுதியாக உத்திரமேரூர் ஏரி உபரி நீர் வெளியேறும் கலங்கல் அருகாமையிலான சாலையில், தண்ணீர் ஏதுவாக வெளியேற வசதியாக அடுத்தடுத்து 2 புதிய உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இப்பணிகளை நெடுஞ்சாலைத் துறை சென்னை வட்ட கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார் நேற்று ஆய்வு செய்தார். பருவமழை துவங்க உள்ளதால், சாலை மற்றும் பால கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

காஞ்சிபுரம் கோட்ட பொறியாளர் முரளிதரன், உத்திரமேரூர் உதவி கோட்ட பொறியாளர் அனந்தகல்யாண ராமன், உத்திரமேரூர் உதவி பொறியாளர் ஜெரேஸ் கோல்ட் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisement