கம்போடியா, வியட்நாம், லாவோஸ் நாடுகளில் கொடுமை; எச்சரிக்கிறார் சைலேந்திரபாபு

7

சென்னை: கம்போடியா, வியட்னாம், லாவோஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கு முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
சைபர் குற்றவாளிகள் இப்போது கம்ப்யூட்டர், டைப்பிங் போன்ற வேலைகளை தெரிந்த இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று, சைபர் குற்றங்களை செய்யும் பணிகளில் வேலைக்கு அமர்த்துகிறார்கள். இதற்காக, அவர்களின் அக்கவுண்ட் நம்பரை பயன்படுத்துகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள விதவிதமான நம்பர்களையும், பேங்க் அக்கவுண்ட்டுகளையும் பயன்படுத்தி மோசடி செய்த பணத்தை போட்டு, அதனை கிரிப்டோ கரன்சியாக மாற்றி மோசடி நடந்து கொண்டு இருக்கிறது.

மொத்தம் 1,185 பேர் கம்போடியா, லாவோஸ் நாடுகளில் வேலைக்குப்போன இளைஞர்களின் விபரங்கள் தெரியவில்லை என்கிறார்கள். அவர்களில் 166 பேரை டிரேஸ் பண்ணவே முடியவில்லை. அங்கு போன பிறகு அங்கு பல்வேறு நெருக்கடிகள் மற்றும் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து கொடுமைப்படுத்துவதாக செய்திகள் வெளியாகின்றன.


எனவே லாவோஸ், வியட்நாம், கம்போடியா உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்காக செல்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும். சென்னை, திருவாரூர், தஞ்சாவூர், மதுரை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இந்த நாடுகளுக்கு வேலைக்காக இளைஞர்களை அனுப்பி வைத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் சொல்லும் அடிப்படையில், வெளிநாடுகளில் சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்படும் இளைஞர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தவே உங்களை அழைத்துச் செல்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த வீடியோவில் சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

Advertisement