காங்கிரசை வழிநடத்தும் அர்பன் நக்சல்கள்: பிரதமர் மோடி தாக்கு

8

வாஷிம்: '' காங்கிரஸ் கட்சியை, அர்பன் நக்சல்கள் தான் இயக்குகின்றனர், '' என பிரதமர் மோடி கூறினார்.

வாசிம் மாவட்டத்தில், விவசாயம் மற்றும் கால்நடைத்துறைகளில் ரூ.23 ஆயரம் கோடி மதிப்பு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.


இதன் பிறகு அவர் பேசியதாவது: பிரதமர் கிசான் சம்மன் நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 9.5 கோடி பேர் 20 ஆயிரம் கோடி நிதி பெற்றுள்ளனர்.

டில்லியில் கோடிக்கணக்கான மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் முக்கிய குற்றவாளி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் விரும்புகிறது.
அர்பன் நக்சல்கள் இணைந்து காங்கிரசை இயக்குகின்றனர். மக்கள் ஒன்றிணைந்து, காங்கிரசின் ஆபத்தான திட்டத்தை தோற்டிக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்தால், தங்களது திட்டம் தோல்வியடையும் என்பது காங்கிரசுக்கு தெரியும். இந்தியாவிற்கு நற்பெயர் கிடைக்ககூடாது என நினைப்பவர்களுடன் இணைந்து காங்கிரஸ் செயல்படுதை அனைவரும் பார்க்கலாம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அசத்தல்



போஹாராதேவி என்ற இடத்தில் உள்ள ஜகதாம்பா மாதா கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள பாரம்பரிய இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்தார்.

அஞ்சலி



தொடர்ந்து, வாசிம் மாவட்டத்தில் உள்ள துறவி சேவாலால் மகாராஜ் மற்றும் துறவி ராம்ராவ் மகாராஜ் ஆகியோரின் நினைவிடங்களிலும் பிரதமர் அஞ்சலி செலுத்தினார். பஞ்சாரா விராசத் அருங்காட்சியகத்தையும் திறந்து வைத்தார். நமோஷேத்கரி மகாசன்மன் நிதி திட்டத்தின் 5வது தவணையையும் பிரதமர் வழங்கினார்.

Advertisement