'பாரத் டெக்ஸ்' கண்காட்சி கோவையில் ஆலோசனை

கோவை: டில்லியில் நடைபெறவுள்ள, 'பாரத் டெக்ஸ் 2025' கண்காட்சி தொடர்பான முன்னோட்ட ஆலோசனைக் கூட்டம், கோவையில் நடந்தது.

மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் ஆதரவோடு, 12 ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில்கள் இணைந்து, டில்லி மற்றும் நொய்டாவில் 2025 பிப்., 14 முதல் 17ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது.

இக்கண்காட்சி குறித்த முன்னோட்ட நிகழ்வு, கோவையில், 'மெட்டெக்ஸில்' சார்பில் நடந்தது.

'கண்காட்சியில் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில், கட்டணத்தைக் குறைக்க வேண்டும். விசைத்தறி மானியம் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, ஜவுளி உற்பத்தியாளர்கள் முன்வைத்தனர்.

மத்திய ஜவுளித்துறை செயலர் ரச்சனா ஷா கூறுகையில், ''ஜவுளித் துறை சார்ந்த அனைவரும் பங்கேற்பதால், அனைத்து பொருட்களும் வாங்கக் கூடிய ஒரு சந்தையாக இருக்கும். அனைவரும் பங்கேற்க வேண்டும்,'' என்றார்.

பாரத் டெக்ஸ் இணை தலைவர் பத்ரேஷ் தோஹியா, மத்திய ஜவுளித்துறை இணை செயலர் ராஜீவ் சக்சேனா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement