'தலசீமியா'வுக்கு இலவச சிகிச்சை பீஹார் மாநில அமைச்சர் தகவல்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், பூட்டுதாக்கில் சி.எம்.சி., மருத்துவமனை கிளை உள்ளது. இங்கு வந்த பீஹார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீமங்கள்பாண்டே மற்றும் சி.எம்.சி., இயக்குனர் விக்ரம் மேத்யூஸ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

பீஹாரில், 'தலசீமியா' நோய் பாதித்தோரை கண்டறிய, இலவச சிறப்பு முகாம் அமைத்து சோதனை நடந்தது; முதற்கட்டமாக, 3,000 பேரை பாதித்தது கண்டறியப்பட்டது. இதில், 52 பேருக்கு, 'ஹீமடோபயோடிக்' மற்றும் ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்க முடிவு செய்யப்பட்டது.

நபர் ஒருவருக்கு, தலா 15 லட்சம் ரூபாய் செலவை, பீஹார் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. நோயாளிகளை விமானம் மூலம் அழைத்து வந்து, ராணிப்பேட்டை சி.எம்.சி., கிளை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம்.

இதற்கான முதற்கட்ட தவணை 3 கோடி ரூபாயை, சி.எம்.சி., மருத்துவமனைக்கு அரசு செலுத்தியுள்ளது. மேலும், 194 பேருக்கு, 'ஸ்டெம் செல்' மாற்று அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement