ராமேஸ்வரத்தில் கடல் புற்கள் ஒதுங்கியது

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்கரையில் பல டன் கடல் புற்கள் ஒதுங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.

வடகிழக்கு பருவமழை சீசன் துவங்க உள்ளதால் கடலில் ஏற்பட்ட தட்பவெப்பம், நீரோட்ட மாற்றத்தில் கடலில் தரைமட்டத்தில் வளரும் கடல் புற்கள் தானாக அறுவடையாகி கரை ஒதுங்குவது வழக்கம். அதன்படி தற்போது வடகிழக்கு பருவக்காற்று வீசத் துவங்கியுள்ளதால் பாக்ஜலசந்தி கடலில் வளர்ந்த கடல் புற்கள், ராமேஸ்வரம் துறைமுகம் முதல் சேராங்கோட்டை கடற்கரை வரை 500 மீட்டருக்கு டன் கணக்கில் கரை ஒதுங்கியுள்ளது.

இதனை மீனவர்கள் கடல் பாசி என்றழைக்கின்றனர்.

கடல் புற்கள் அடுத்தடுத்து குவிந்து கிடப்பதால் கடற்கரை முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மீன்களை இறக்கவும், படகில் எரிபொருள், ஐஸ்பார்களை ஏற்ற மீனவர்கள் சிரமப்படுகின்றனர். கடல் பாசி நவ., வரை கரை ஒதுங்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

Advertisement